கொல்கத்தா:
மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 107 எம்எல்ஏ-க்களை, பாஜகவுக்கு இழுக்க பேரம்நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாஜகவில் சேர விருப்பம் தெரிவித்துள்ள 107 எம்.எல்.ஏ.க்களின் பெயர் பட்டியல் தன்னிடம் உள்ளது என திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள்தலைவரும், தற்போதுபாஜகவில் இருப்பவருமான முகுல் ராயும் அதை உறுதிப்படுத்தியுள்ளார்.